இராஜபாளையம் நாய்
வரலாறு:
விஜயநகரப் பேரரசின் வருகையின் போது ஆந்திர ,கர்நாடகப் பகுதியில் இருந்து தமிழகம் வந்த பாளையக்காரர்கள் மூலமாக தமிழகம் வந்த நாய் இனமாகும்.இது முன்னர் மன்னர்களின் போர்படைகளிலும் இருந்து வந்து உள்ளது .
பெயர்க்காரணம்:
இராஜபாளையம் நாய் இனம் என்பது ஆந்திர,கர்நாடாகப் பகுதியில் இருந் பாளையக்காரர்களால் கொண்டுவரப்பட்டதாகும். அங்கு இவ்வகை நாய் இனம் அழிந்து பொய் விட்டதால் தமிழகத்தின் ராஜபாளையத்தில் மட்டும் பாத்து காத்து வைத்து இருந்தனர் இதனாலேயே இந்த நாய்க்கு இராஜபாளையம் நாய் என இவ்வோரின் பெயராலேயே அழைக்கப்பட்டது . இந்த இன நாய்களை பொலிகர் ஹவுண்ட் என்றும் அழைக்கப்படுகிறது. இது வெள்ளை மூஞ்சி நாய் என்று சுற்று வட்டார பகுதிகளில் அழைக்கப்படுகிறது.இதன் பிற வேட்டை நாய்களைக் காட்டிலும், வலுவான எலும்புகளைப் பெற்றுள்ளது.
உருவத்தோற்றம்:
இது சராசரியாக 65 முதல் 75 செ.மீ வரை வளரும்.
சராசரியாக 30 முதல் 45 கிலோ எடை இருக்கும்.இது வெள்ளை நிற உடலும் ,இளஞ்சிவப்பு மூக்கும் கொண்டிருக்கும்.காதுகள் சற்று மடிந்து காணப்படும்.
குணம்:
இராஜபாளையம் நாய்கள் தன் உரிமையாளரிடம் மிகவும் பாசம் உடைய நாய் ஆகும்.இது பண்ணை மற்றும் தோப்புக்களி காவலுக்காகவும் ஒரு நல்ல காவலாளி ஆகவும் இருந்து வருகிறது.



0 Comments