வணக்கம்,
நண்பர்களே இது என் முதல் பதிவு அதனால் என் சொந்த ஊரைப்பற்றி எனக்கு தெரிந்த சில விஷயங்களை பதிவிடுகிறேன் ........
தவறுகள் இருப்பின் தங்களின் கருத்துக்களை கூறுங்கள் ......
இராஜபாளையம்

அமைவிடம் :
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் விருதுநகர் என்று அழைக்கப்படும் மாவட்டத்தில் அமைந்துள்ள முதல் பெரிய நகரமானது இராஜபாளையம். மதுரையில் இருந்து 85 கி .மீ தென்மேற்கில் அமைந்துள்ளது .
பெயர்க்காரணம் :
இங்கு 15ஆம் நூற்றாண்டின் மத்தியில் ஆந்திராவில் இருந்து தெலுங்கு பேசும் ராஜூக்கள் அவர்கள் வருகைக்கு பிறகு இப்பெயர்பெற்றது .அதற்கு முன்னர் பாளையம் என்று அழைக்கப்பட்டது இன்றும் பழையபாளையம் ,புதுப்பாளையம் இன்றும் வழக்கில் உள்ளது . அவர்கள் முதலில் கீழராஜகுலராமனில் வசித்து வந்திருக்கிறார்கள். பின்னர் 1885ஆம் ஆண்டு விஜய சொக்கநாத நாயக்கரிடம் இருந்து வாங்கி இந்த இராஜபாளையத்தை உருவாக்கி இருக்கின்றனர் .
மக்கள்தொகை:
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,30,119 மக்கள் இங்கு வாழ்கின்றனர் .இவர்களில் ஆண்கள் 64,624 பெண்கள் 65,495சராசரியாக வாழ்கின்றனர் .மக்கள் தொகையில் 10,504 பேர் ஆறு வயதிற்கு உட்பட்டவர்கள் .
கல்வியறிவு:
சராசரி கல்வியறிவு 86.25%. ஆண்கள் கல்வியறிவு 92.18%
பெண்கள் கல்வியறிவு 80.43% ஆகும்.
தொழில்கள்:
முதன் முதலில் விவசாயமே நடைபெற்று வந்துஇருக்கிறது .பின்னர் 1900 களில் வணிகம் சார்ந்த தொழில்கள் வளர்ச்சி பெற துவங்கின .பின்னர் பருத்தி சார்ந்த தொழில்கள் தொழில்சாலைகள் ஆரம்பிக்கப்பட்டது
சுற்றுலாத்தலங்கள்:
* அய்யனார் கோவில் அருவி
* சஞ்சீவி மலை
* ராக்காச்சி அம்மன் கோவில் மற்றும் அருவி மற்றும் பல,..
அய்யனார் கோவில் அருவி:
இது ராஜபாளையம் நகரில் இருந்து 14 கி.மீ மேற்கில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது .அங்கு நீர்காத்த அய்யனார் கோவிலும் அதன் பின்னர் அருவியும் உள்ளது . இங்கு குரங்குகள் காணப்படும். இந்த அருவியில் இருந்து வரும் நீர் நகரில் உள்ள மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ளது.
சஞ்சீவி மலை:
இது ராஜபாளையத்தில் இருந்து கிழக்கில் சத்திரப்பட்டி என்னும் ஊருக்கு செல்லும் வழியில் இருக்கிறது.இது மிகவும் அமைதியான இடமாகும்.இங்கு மலையேற்றம் செய்ய நல்ல ஒரு இடம்.இங்கு மலையின் மீது ஒரு அனுமன் கோவில் ஒன்று உள்ளது. மலை அடிவாரத்தில் வனத்துறை அலுவலகம் உள்ளது.
ராக்காச்சி அம்மன் கோவில் அருவி:
இதுவும் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் தான் அமைந்துள்ளது.இங்கு ராக்காச்சி அம்மன் கோவில் ஒன்று உள்ளது .அருகில் அருவியும் உள்ளது.இது இயற்கை எழில் கொஞ்சி விளையாடும் அருவி.

இராஜபாளையம் நாய்:
இராஜபாளையம் என்றாலே பலருக்கும் நியாபகம் வருவது இராஜபாளையம் நாய் மட்டும் தான் ஏனென்றால் இந்த நாய்களுக்கு என்று தனி சிறப்புகள் உள்ளது . நான் இராஜபாளையம் நாய்களைப் பற்றி அடுத்த பதிவில் தங்களுக்கு கூறுகிறேன் .



0 Comments