கன்னி நாய்
வரலாறு:
கன்னி என்பது தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு நாய் இனமாகும்.இது ஒரு அறிய ஓரிடவழி நாய் இனமாகும் .இது மதுரை நாயக்கர் காலத்தில் ஆந்திர ,கர்நாடகப் பகுதிகளில் இருந்து வந்த படைகளின் தலைவர்களால் கொண்டுவரப்பட்டது ஆகும். கன்னி நாய் தற்போது தமிழகத்தின் திருநெல்வேலி,கோவில்பட்டி,கழுகுமலை,சிவகாசி,மதுரை சுற்று வட்டாரப் பகுதிகளில் காணப்படுகிறது.
பெயர்க்காரணம்:
இந்த நாயின் பெயர் கன்னி என பெயர் வருவதற்கு காரணம்,இந்த நாய்கள் திருமணத்திற்கு முன்பு மாப்பிள்ளைக்கு பரிசாக வழங்கப்பட்டது. அதாவது,வரதட்சணை பொருட்களில் ஒன்றாக இந்த நாய் தரப்பட்டது. இது தென் தமிழகத்தில் உள்ள கன்னி ஆடு என்ற ஆடு இனத்தை போன்ற நிறத்தில் இருந்ததால் இதற்கு கன்னி என்ற பேயம் வழங்கப்பட்டுள்ளது.
உருவத்தோற்றம்:
ஆன் கன்னி நாய் நின்ற நிலையில் 64 சென்டிமீட்டர் உயரமும் பெண் கன்னி நாய் 56 சென்டி மீட்டர் உயரம் வரை இருக்கும். இது 16 முதல் 22 கிலோ எடை இருக்கும். கன்னி நாய்கள் பொதுவாக கருப்பு ,பழுப்பு நிறத்தில் இருக்கும் சில நாய்களுக்கு கால் பாதங்களிலும் ,மார்பிலும் வெண்மை நிறம் குறைந்த அளவில் காணப்படும் . இதில் ஒரு கிரீம் நிற நாய் வகை ஒன்று உள்ளது அதனை 'பால்கன்னி' என்று அழைக்கப்படுகிறது.
கன்னி நாய்கள் கூரிய நீண்ட முகம்,சிறிய தலை ,மெலிந்த நீண்ட உடலமைப்பு ,குறைந்த ரோமங்கள் ,நீண்ட வால் என்கிற உடல் அமைப்போடு இருக்கும்.
குணம்:
கன்னி நாய்கள் கூச்ச சுபாவம் உடையது,இருந்தாலும் அது வீட்டையும் தன் எஜமானையும் பாதுகாக்கும்.இது தொல்லை கொடுக்காது.இது மிகவும் விசுவாசமானதாக இருக்கக்கூடியது .இதனை பயிற்ச்சி அளிப்பது சுலபம்.இவைகள் மிகவும் சுறு சுறுப்பானவை ,வழமையான கால்களை கொண்டிருப்பதால்.இவைகள் வேட்டைக்கு பயன்படுத்தப்படுகிறது.வேட்டையின் பொது தனித்து இயங்கும் தன்மை உடையது.
இதனை ஊசிமூஞ்சி நாய் ,மோசக்காடி நாய்,தோல்நாய் ,பொடித்தலை நாய், குவளைவாய் நாய் என்று இன்னும் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.
இதனை பெரும்பாலும் வேட்டையாடுதல் தேவைகளுக்காக மட்டுமே வளர்க்கின்றனர்.


0 Comments