கூகுளில் தேடவே கூடாத 10 விஷயங்கள்
இன்று அனைவருக்கும் தோன்றும் சந்தேகங்கள் அனைத்திற்கும் நாம் தேடக்கூடிய,கேற்கக்கூடிய ஒரே இடம் நம்ம கூகுளை தாங்க...
அப்படி நாம் கூகுளில் நமக்கு தேவைப்படும் எல்லா அடிப்படைத்தகவல்கள்,சமையல்,படம்,ஆன்லைன் ஷாப்பிங் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.அந்த அளவுக்கு கூகுள் நமக்கு தேவையான தகவல்களை தந்து கொண்டே தான் இருக்கிறது...
நாம் ஒரு போதும் கூகுளில் தேடவே கூடாத விஷயங்கள் சிலவற்றை கீழே பார்ப்போம் :
1] கஸ்டமர் கேர் எண்கள் :
நம்மை ஏமாற்றும் நபர்கள் , ஏமாற்றுவதற்காக அசல் வாடிக்கையாளர் பராமரிப்பு எண்களை போலவே உள்ளாகி போலி எண்களை பதிவு செய்து வைத்து உள்ளனர் .இதனால்,அதில் வரும் பராமரிப்பு எண் சரியானது என நம்பிவிடுவதால் பல மோசடிகளில் சிக்குகின்றனர் .
எனவே,கூகுளில் ,நிறுவங்களின் வாடிக்கையாளர் பராமரிப்பு எண்களை தேட வேண்டாம் .
2] ஆப்ஸ் மற்றும் சாப் ஃட்வேர்களை பதிவிறக்கம் செய்வதனால் :
நமக்கு தேவைப்படும் ஆஃப்ஸ்களை கூகுள் பிளேஸ்டோர் மற்றும் ஆப்ஸ் ஸ்டோர் இப்படி பட்ட அதிகாரப்பூர்வ தளங்களில் மட்டுமே பதிவிறக்கம் செய்து பயன்படுத்துங்கள்.மால்வேர் உடன் கூடிய ஆஃப்- களை பதிவிறக்கம் செய்வதற்கான வாய்ப்பு கூகுளில் அதிகமாக உள்ளதால் ஆபத்தான சிக்கலில் சிக்கிக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம்.
கூகிளில் மருந்துகள்,மற்றும் மருத்துவ அறிகுறிகளை ஒரு போதும் தேட வேண்டாம்.அது உங்களின் உயிருக்கு ஆபத்தாக வாய்ப்புகள் உள்ளது.நீங்கள் நோய்வாய்பட்டிருக்கும் போது ,மருத்துவரை அணுகுவதே உடலுக்கு சிறந்தது.
4]அரசாங்க வலைத்தளங்கள் மூலமாக கூட ஆபத்து வரலாம்:
வங்கி வலைத்தளங்கள் போலவே ,நகராட்சி வரி,மருத்துவமனைகள் போன்ற அரசாங்க வலைத்தளங்கள் தான் மோசடி செய்பவர்களின் இலக்குகளாக இருக்கும்.எனவே சரியான URL உங்களுக்கு தெரிந்தாலே தவிர வேற ஏதும் தவறான வலைத்தளங்களை சென்று சிக்கலில் சிக்கிக் கொள்ளாதீர்கள் .
5] ஆன்டி -வைரஸ் ஆபத்து:
இலவசமாகக் கிடைக்கும் ஆன்டி -வைரஸ்சில் பல போலி தயாரிப்புகள் உள்ளது.நம் தனிப்பட்ட தகவல்களை திருடக் கூடிய போலி ஆன்டி வைரஸ்களை பயன்படுத்துவர்க்கு பதிலாக நம்பகத்தன்மை வாய்ந்த கட்டண சேவை உடைய ஆன்டி வைரஸ் பயன்படுத்துவது சிறந்தது .
6] ஷாப்பிங் சலுகைகள்:
அதிக விலை உடைய பொருளை சலுகை என்று உங்களை கவர்வதற்கு பல போலி வலைப்பக்கங்கள் நிரம்பி உள்ளது எனவே மிக குறைந்த விலை என்று ஆர்வத்தில் உள்ளே சென்றால் ,உனபாலுடைய வங்கி விபரங்கள் திருடப்படுகின்றன.
7] கூகுள் வழி சமூக ஊடக தளங்களில் உள்நுழைவதால் :
சமூக வலைத்தள அசவுண்ட்களை கூகுளின் வழியாக லாகின் செய்வதை தவிர்க்கவும். கூகிளின் மூலம் லாகின் செய்வது பிஷிங்ற்கு வழிவகுக்கும் . எனவே , சமூக வலைத்தளங்களின் பிரத்யேக செயலி மூலம் லொகின் செய்ய வேண்டும்.
8] இலவச கூப்பன் ஆபத்து:
நாம் ஈ காமர்ஸ் தளங்களில் ஏதேனும் பொருட்கள் வாங்கும் பொழுது கூப்பன்கள் கிடைத்தால் சிறந்தது. அதே போல் இலவச கூப்பன் என்று கூடும் போலி ஈ-காமர்ஸ் வலைத்தளங்களை கூகிளில் அதிகரித்து வருகின்றது .எனவே இலவசம் என்று க்ளிக் உங்களின் வாங்கி தகவல்கள் திருட வாய்ப்புகள் உள்ளது.
9] பங்குச் சந்தைகள் மற்றும் நிதி ஆலோசனை:
அனைவரையும் பணக்காரர்களாக மாற்றும் ஒரு முதலீட்டுத் திட்டம் என்று ஒன்று ஒருபோதும் இருக்க வாய்ப்புகள் இல்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள்.கூகிளில் சில மோசடி நிறைந்தவை இந்த தேடுதலை தவிர்ப்பது நல்லது.
10] ஆபாச வலைத்தளங்களை தேடுவதன் மூலம்:
கூகுள் என்பது தேடுபொறி மட்டுமல்ல ;இது உலகின் மிகப்பெரிய விளம்பரத் தளமாகும் .கூகிளில் நீங்கள் ஆபாசத்தை தேடும்பொழுது,நீங்கள் பின்னர் பார்வையிடும் சாதாரண வலைத்தளங்களில் கூட ஆபாசம் நிறைந்த விளம்பரம் அதிகமாக தோன்றும்.கூகுளை அக்கௌன்ட் மூலம் நீங்கள் திடும் பொழுது உங்களுடைய விபரங்கள் அம்பலமாக வாய்ப்புகள் உள்ளது.




0 Comments