1ஜி ,2ஜி,3ஜி,4ஜி அவற்றின் வித்தியாசங்கள் என்ன?
இப்போது நாம் அனைவரும் உபயோகப்படுத்துவது 4ஜி சேவையை தான்..கூடிய விரைவில் 5ஜி சேவை நம் இந்தியாவிற்கு வந்துவிடும்அதற்க்கு முன்னர் நாம் பயன் படுத்திய 3ஜி,2ஜி,1ஜி ஆகியவற்றை பற்றியும் அவற்றிக்கு உள்ள வேறுபாடுகளை பற்றியும் இந்த தொகுப்பில் காண்போமா.....
முதலில் G என்ற எழுத்து Genaration அதாவது தலைமுறையைக் குறிக்கும் .
1ஜி சேவை:
முதன் முதலில் வியாபார புழக்கத்தில் கொண்டுவரப்பட்ட இந்த சேவை 1980-களில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சேவை மூலம் தன முதன் முதலில் அனலாக் சிக்னல்கள் மூலம் ஒருவருடன் ஒருவர் ஒயர் இல்லாமல் பேசும் வசதியை மட்டுமே உருவாக்கி இருந்தது. அமெரிக்காவில் கொண்டுவரப்பட்டது.இதன் மூலம் அதிகபட்சமாக 14.4 kbps வேகம் மட்டும் தான் இருந்துள்ளது. இதை பயன்படுத்தும் அலைபேசிகள் பெரியதாகவும்,பேட்டரி திறன் குறைவாக இருந்தன.
2ஜி சேவை:
இது 1991-ம் ஆண்டு தான் இந்த சேவை தொடங்கப்பட்ட்து .இதுதான் ஒயர் இல்லாமல் இன்டர்நெட் பயன்படுத்தக்கூடிய சேவை இது தான்.2ஜி சேவையின் மூலம் தான் குறுஞ்செய்திகளை அனுப்பும் SMS வசதி ,படங்கள்,காணொளியை அனுப்பும் MMS வசதி என்று நாம் இன்று பயன்படுத்தக்கூடிய இன்டர்நெட் வசதிகளுக்கு வித்திட்டது இந்த சேவை தான். இதில் தான் முதன் முதலில் சிம் கார்டுகள் பயன்படுத்தப்பட்டன.
3ஜி சேவை:
இது 2001-ம் ஆண்டில் தான் ஜப்பானில் அறிமுகமானது.நம் இந்தியாவிற்கு மிக தாமதமாக தான் வந்து சேர்ந்தது இந்த சேவை இது 2ஜி சேவையை காட்டிலும் புது புது சிறப்பு அம்சங்களை கொண்டு இருந்தது.இதில் இன்டர்நெட் வேகமானது 2ஜி சேவையைக் காட்டிலும் மிக அதிகமாக இருந்தது...இதில் வீடியோ காண்ப்பரென்ஸ் வசதி,ஜி.பி.எஸ் வசதிகள் இதற்கு பிறகு தான் அறிமுகமானது..ஒயர் இல்லாத அதிவேக இன்டர்நெட் சேவையை கண்டது இதில் தான்.
4ஜி சேவை:
இது முதன் முதலாக 2009-ம் ஆண்டு தென்கொரியாவில் தான் அறிமுகமானது. அதிவேக இன்டர்நெட் வசதி,துல்லியமான வீடியோ கால்கள் என தொலைத்தொடர்பு உலகத்தையே ஒரு மாற்றத்தை கொண்டுவந்தது இந்த 4ஜி சேவை தான்.இதன் மூலம் தான் லைவ் ஸ்ட்ரீமிங் போன்ற பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.நம்மால் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு நொடிப்பொழுதில் மெயில் அனுப்புவது போன்ற இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இதன் மூலம் 100 மெகா பைட் (mb ) வேகம் வரை 4ஜி சேவைகள் இன்று இயங்கி வருகிறது...
5ஜி யை பற்றி அடுத்த பதிவில் பாப்போம்........


0 Comments